புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் புதிய மாணவிகள் சேர்க்கை

புதுக்கோட்டை, ஜூன் 14: 2022-23ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பையொட்டி, புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, நேற்று நேரில் பார்வையிட்டு, புதிய மாணவியர்களின் சேர்க்கையினை ஆய்வு மேற்கொண்டார். கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பினையொட்டி, 9, 10ம் வகுப்பு மாணவியர்களை நேரில் பார்வையிட்டு அவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மேலும் 9, 10ம் வகுப்பு மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்களை கலெக்டர் கவிதா ராமு, வழங்கி, கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தினார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், ஆர்டிஓ அபிநயா, பள்ளி துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: