குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை கோயிலுக்கு அழைத்து சென்று வழிபாடு

குத்தாலம்,ஜூன் 14: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று 1-ம்வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளிகள் நேற்று துவக்கப்பட்ட நிலையில் குத்தாலம் ஹைஸ்கூல் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருகைதந்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் அருகிலுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்து அவர்களுக்கு வாழ்த்து கூறி வரவேற்பு அளித்து, பின்னர் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

Related Stories: