ஆத்தூர் நகர திமுக செயலாளராக முருகானந்தம் தேர்வு

ஆறுமுகநேரி, ஜூன்14: ஆத்தூர் நகர திமுக நிர்வாகிகள் தலைமைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் நகரச்செயலாளராக ஆத்தூர் பஞ். முன்னாள் தலைவர் முருகானந்தம், அவைத்தலைவராக அப்துல்காதர், துணைச்செயலாளர்களாக செல்வராஜ், ரமணிபாய், பரமேஸ்வரி, பொருளாளராக சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்டப்பிரதிநிதிகளாக கணேசன், ஆண்டியப்பன் கண்ணன், ஒன்றியப்பிரதிநிதிகளாக மூர்த்தி, மாரியப்பன், கணேசன், நாராயணபெருமாள், சமுத்திரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆத்தூர் நகர தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: