×

ெதற்கு ஆத்தூரில் திமுக நலத்திட்ட உதவி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

ஆறுமுகநேரி, ஜூன் 14: தெற்குஆத்தூரில் நடந்த திமுக தெருமுனைப்பிரசார கூட்டத்தில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கலைஞரின் 99வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்குஆத்தூரில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. ஆழ்வை கிழக்கு ஒன்றியச்செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். கூட்டத்திற்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமை வகித்து 300 பேருக்கு இலவசமாக அரிசிப்பைகள் மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார். யூனியன் சேர்மன் ஜனகர், ஆத்தூர் பஞ். தலைவர் கமால்தீன், நகரச்செயலாளர் முருகானந்தம், புன்னக்காயல் பஞ். தலைவர் சோபியா, ஒன்றிய துணைசெயலாளர் பக்கீர்முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், ஆத்தூர் பஞ். முன்னாள் துணைத்தலைவர் அக்பர், கவுன்சிலர் மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி செயலாளர் லிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முக்காணியில் நடந்த திமுக தெருமுனை பிரசார கூட்டத்துக்கு மும்பை மாதவன் வரவேற்றார். வைகுண்டம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இலவச தையல்மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றியச்செயலாளர் கோட்டாளம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முக்காணி பஞ். தலைவர் தனம் என்ற பேச்சித்தாய், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள், எஸ்.ஜே.ஜெகன், மத்திய ஒன்றியச்செயலாளர் ரவி, உடன்குடி கிழக்கு ஒன்றியச்செயலாளர் பாலசிங், ஆறுமுகநேரி பஞ். துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Assistant Minister ,Anita Radhakrishnan ,South Attur ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...