ஸ்ரீவை. மத்திய, கிழக்கு ஒன்றிய திமுக புதிய நிர்வாகிகள் தேர்வு

ஏரல், ஜூன் 14:  ஸ்ரீவைகுண்டம் மத்திய, கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.    ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் திமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் என இருந்ததை தற்போது கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஒன்றியம் என மூன்றாக பிரிக்கப்பட்டு அதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீவை. மத்திய ஒன்றிய பகுதியில் ஒன்றிய அவைத் தலைவராக கபில் ரகுமான், செயலாளராக பிஜி ரவி, துணைச் செயலாளராக கிருஷ்ணன், சண்முகராஜா, லீலா, மாவட்ட பிரதிநிதிகளாக ஜெயசங்கர், முத்துராமலிங்கம், இசக்கிமுத்து, பொருளாளராக பத்திரகாளிமுத்து மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.    இதேபோல் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய பகுதியில் அவைத்தலைவராக மாரியப்பன், ஒன்றிய செயலாளராக கோட்டாளம், துணைச் செயலாளர்களாக அருணா, ராமசுப்பிரமணியன், காஞ்சனதேவி, பொருளாளராக பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகளாக சின்னதம்பி, காட்வின் ராஜா, சுடலைமணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை திமுக பிரமுகர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: