சுவாமி- அம்பாள் அபிஷேகத்திற்கு நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி

நெல்லை, ஜூன் 14:  நெல்லை டவுனில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர், காந்திமதி அம்பாள்  கோயிலில் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நெல்லையப்பர் கோயிலில் சுவாமி- அம்பாள் அபிஷேகத்திற்கு தேவையான சந்தனாதி தைலத்தை கோயிலிலேயே தயாரித்து அபிஷேகத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி நெல்லையப்பர் கோயிலில் சுமார் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு பாத்திரத்தில் 44 மூலிகைகள் கொண்டு சந்தனாதி தைலம் தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது. இதையொட்டி முன்னதாக நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் உதவி ஆணையாளர் கவிதா, செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: