கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

பெரியகுளம், ஜூன் 14: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து சீராக இருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வட்டக்கானல், கொடைக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிக்கு கீழ் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்கு பின்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related Stories: