பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருப்புத்தூர், ஜூன் 14: திருப்புத்தூர் அருகே சமத்துவபுரம் எதிரே காமாட்சி சன்மீனா வளாகத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 11ம் தேதி காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. மாலையில் முதற்கால யாக பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. ஜூன் 12ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9.20 மணியளவில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு, சுமார் 9.30 மணியளவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குருக்கள், பிச்சைக்குருக்கள் முன்னிலையில் விமானத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ச.நாகராஜன் பிள்ளை-விமலாதேவி குடும்பத்தார் செய்திருந்தனர்.

Related Stories: