ஆனந்தூரில் மதநல்லிணக்க கும்பாபிஷேக விழா நீர், மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 14: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்பிகா ஸமேத திருமேனிநாத சுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா  கடந்த 10ம் தேதி தொடங்கியது. மறுநாள் வாஸ்து சாந்தி, முதல் கால யாகபூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. 12ம் தேதி விஷேச சாந்தி, இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று கோ பூஜை, நான்காம் கால பூஜை மற்றும் மஹாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்கி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதன் முன்பாக அய்யனார், முனீஸ்வரர் ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆனந்தூர், பச்சனத்திக்கோட்டை, சாத்தனூர், சிறுநாகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஆனந்தூர் ஜமாத் சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்திருந்தனர். விழாவில் ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: