ரெங்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

சோழவந்தான், ஜூன் 14: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கவுல்பட்டி ரெக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவில் ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி கோஷமிட்டனர். இதையடுத்து ரெக்கம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: