அம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

திருமங்கலம், ஜூன் 14: திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும் நாட்டு மக்கள் நலமுடன் வாழவும் இந்த முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.விரதம் இருந்த பெண்கள் தாங்கள் வீடுகளில் பயபக்தியுடன் வளர்த்த முளைப்பாரியை கோயில் வளாகத்திற்கு கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் செண்டை மேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் சுமந்து ஊர்வலமாக கோயிலில் இருந்து புறப்பட்டனர்.நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, உசிலம்பட்டி ரோடு வழியாக முளைப்பாரி ஊர்வலம் சென்றது. திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே குண்டாற்று பகுதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து முளைப்பாரி ஆற்றில் கரைக்கப்பட்டது

Related Stories: