×

பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து

தாராபுரம்,ஜூன்14: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பாப்பையன் பட்டி தொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சை பிரித்தெடுத்து அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட தேங்காய் நாரை பிரித்தெடுத்து இயந்திரங்கள் மூலம் பண்டல்கள் ஆக இதன் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.நேற்று மாலை தேங்காய் நார் அடுக்கி வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால்  மண்டியில் பற்றிய தீ மளமளவென்று கிடங்கு முழுவதும் பரவியது. தீயை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் தாராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Manji Gudon ,
× RELATED பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம்