திருத்துறைப்பூண்டியில் புதிதாக மல்லிகா பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் ஷோரும் திறப்பு விழா

திருத்துறைப்பூண்டி, ஜூன் 11: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் மல்லிகா பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் ஷோரும் புதிதாக அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய ஷோருமை மல்லிகா குரூப் தலைவர் தியாகராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். துணைத்தலைவர் கற்பகம் தியாகராஜன் மற்றும் நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மல்லிகா பர்னிச்சர் நிர்வாக இயக்குனர் சந்திப்குமார், மல்லிகா தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் ரோஹித்குமார் ஆகியோர் வரவேற்றனர். மல்லிகா பர்னிச்சர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் ஷோருமின் சிறப்பம்சங்கள் குறித்து அதன் உரிமையாளர் தியாகராஜன் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற கைராசி நிறுவனமான மல்லிகா பர்னிச்சர் எலக்ட்ரானிக்ஸ் தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருச்சி, சேலம், காரைக்கால் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப தற்போது திருத்துறைப்பூண்டியில் உதயமாகி உள்ளது. இங்கே பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றுக்கு தனித்தனி பிரிவுகள் உள்ளன. பர்னிச்சர் பொருட்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திறப்பு விழாவில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: