இஸ்லாமிய மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேராவூரணி, ஜூன் 11: தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பேராவூரணி கிளை சார்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பில், கேள்வி - பதில் வடிவிலான மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மஸ்ஜிதுத் தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் லண்டன் கனி தலைமை வகித்தார். செயலாளர் அல்லாபிச்சை வரவேற்றார். மாநிலப் பேச்சாளர் அப்துல் கரீம் பேசினார்.இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை களைவது, வரதட்சணை வாங்கக்கூடாது, பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் கேள்வி பதில் வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட துணைத் தலைவர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: