மங்கள நாயகி கோயில் கும்பாபிஷேகம்

பொன்னமராவதி, ஜூன் 11: பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி மங்களநாயகி உடனுறை நாகீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிசேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 8ம் தேதி முதல் மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் வாழைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டாரப்பொதுமக்கள் கலந்து கொண்டனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: