×

விராலிமலை முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

விராலிமலை, ஜூன் 11: விராலிமலை முருகன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் வைகாசி விசாக தேரோட்டம் நாளை (12ம் தேதி) வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.திருச்சியில் இருந்து 28வது கிமீயில் அமைந்துள்ள விராலிமலை முருகன் மலைக்கோயில் 207 படிகள் கொண்ட சிறப்பு பெற்ற தலமாகும். வள்ளி, தெய்வானை சமேதகராக ஆறுமுகங்களுடன் காட்சியளிப்பது இக்கோயிலின் தனிசிறப்பாகும். அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இத்திருத்தலத்தில் தேசிய பறவையான மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது கண்கொள்ளா காட்சியாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக தேரோட்டம் நாளை (12ம் தேதி) நடைபெறுகிறது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவை தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளைகளில் முருகன், வள்ளி, தெய்வானை சமேதகராக மயில், கேடயம், பச்சைமயில், பூதம், நாகம், யானை, சிம்மம், வெள்ளிக்குதிரை, வெள்ளிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவான முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (12ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் போலீசார் பாதுகாப்பு பணியை திவிரப்படுத்தி வருகின்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Viralimalai Murugan Temple ,
× RELATED தைப்பூசத்தையொட்டி கோயில்களில் தேரோட்டம்..!!