×

32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணி

சீர்காழி, ஜூன் 11: சீர்காழி நகரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக்குளக்கரையில் சிவன் பார்வதி தோன்றி திருஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப்பால் கொடுத்த ஸ்தலமாகும் இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மதிமுக மாவட்ட செயலாளர் மார்க்கோனி கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியம் கோயில் நிர்வாகி செந்தில் கோயில் ஆசிரியர் கோவி நடராஜன் மற்றும் ஊழியர்கள் பக்தர்கள் உடன் இருந்தனர்.

Tags : Kumbabhishek ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா