கால்நடை பராமரிப்பு துறையில் காலி பணியிடங்களுக்கு ஆள் தேர்வு: வதந்திகளை நம்ப வேண்டாம்

கரூர், ஜூன் 11: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்கள் நிரப்பிட வேலை வாய்ப்பு மூலம் எடுக்கப்படுவதாகவும், சம்பளம் முறையே ரூ. 15ஆயிரம் மற்றும் ரூ. 18 ஆயிரம் எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேர பயிற்சி அளித்து, பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வழங்கப்படும் எனவும், விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்திடுமாறும், Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுதும் 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பணியிடங்கள் வீதம்) எனவும் புலனம் வாயிலாக தவறான செய்தி வெளிவந்துள்ளது.இந்த செயலி மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை எனவும், தவறான தகவல்கள் பகிரப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: