க.பரமத்தி அருகே 2 கார்கள் மோதல்: ஒருவர் படுகாயம்

க.பரமத்தி ஜூன் 11: க.பரமத்தி அடுத்த தென்னிலை பகுதியில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுரேஷ் (40). பணி நிமித்தமாக காரில் புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி வந்து விட்டு ஊருக்கு திரும்ப மீண்டும் காரை காங்கேயம் நோக்கி ஓட்டி வந்தார். தென்னிலை கடைவீதி அருகே வந்தபோது எதிரே கரூர் ரெட்டிபாளையம் சந்துரு என்பவர் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது.  இதில் படுகாயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: