கோவில்பட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டி, ஜூன் 11: கோவில்பட்டி நகராட்சி 20-வது வார்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் கட்டிடங்கள் மிகவும் பழமையாக இருந்ததால் அதனை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மாநில சுகாதாரத்துறை ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து ஊரணி தெருவில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் கருணாநிதி பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் ராஜாராம், நகராட்சி துணைத்தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் பிரதான் பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: