அடிப்படை பிரச்னைகளை தீர்க்கக்கோரி யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை, ஜூன் 11: அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளான பாலையம்பட்டி விரிவாக்கப் பகுதி, மதுரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பை அகற்றவும், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பந்தல்குடி ஊருக்குள் வந்து செல்லவும், குருந்தமடம், சுக்கில்நத்தம் ஆகிய பகுதிகளில் குளியல்தொட்டி அமைக்கவும், மூடிக்கிடக்கும் பந்தல்குடி பஸ்நிலையத்தை செயல்படுத்தவும், பாலையம்பட்டியில் குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் லீலாவதி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் பூங்கோதை, ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: