×

ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு

ராஜபாளையம், ஜூன் 11: ராஜபாளையம், ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி பொறியியில் துறை சார்பில் ‘பைதான் பூட்கேம்ப்’ என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் இணைய வழியாக நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 90 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சி வகுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி பொறியியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி வழிகாட்டுதல்படி கணினி பொறியியில் துறை பேராசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியாக, இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மின்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : Ramco Technical College ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...