வாலாந்தூர் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

மதுரை, ஜூன் 11: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், ராஜதானி வாலாந்தூரில் முதல்நாடு நான்கு தேவர் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அங்காளஈஸ்வரி, அருள்மிகு வாலகுருநாத சாமி கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இவ்விழாவில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கரட்டுப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர்கள் மா.தவச்செல்வம், மா.காந்திராஜன் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளஈஸ்வரி, அருள்மிகு வாலகுருநாத சாமிகளை தரிசனம் செய்தனர். பின்னர் இவர்கள் குடும்பத்தார்கள் சார்பாக விழாவில் கலந்து கொண்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: