×

போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாறவேண்டாம் சாய உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர்,  ஜூன் 11: சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன்,  பொதுச்செயலாளர் முருகசாமி ஆகியோர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா  சங்கம், டீமா மற்றும் டிக்மா ஆகிய சங்கங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் இயங்கி வருகின்ற சாயத்  தொழிற்சாலைகள் 100 சதவீதம் சாயக்கழி நீரை சுத்திகரிப்பு செய்து,  சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதுகாத்து சிறப்பாக செயல்பட்டு  வருகிறது. இந்நிலையில் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களில் குறைந்த  கட்டணத்தில் சாயமிடுவதாக பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் கூறி,  சாயத்தொழிற்சாலைகளே இல்லாத ஏஜென்டுகள் துணியை எடுத்து சென்று சாயம் ஏற்றி தருகிறார்கள். இவர்களில் பலர் எடுத்துச் செல்கின்ற பனியன் துணிகளை  சாயமிடாமல் வெளியில் விற்றுவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள். இது தொடர்பாக  எங்களது சங்கத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன. எனவே, பனியன் கம்பெனி  உரிமையாளர்கள் சிறிய லாபத்திற்காக போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாற வேண்டாம்  என்று கேட்டுக்கொள்கிறோம். இதனை தங்களது சங்க உறுப்பினர்களுக்கு  அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Dye Owners Association ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை