×

அரசு பள்ளி மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய சத்தி நகராட்சி தலைவர்

சத்தியமங்கலம், ஜுன்.11: சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தனு (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவி தனு இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமியிடம் சீருடை வாங்க பணம் இல்லாததால் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி நேற்று மாணவி தனுயை  நகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து சீருடை வாங்குவதற்கும், பள்ளியில் படிப்பதற்காக நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்காகவும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். உதவித்தொகை வழங்கிய நகராட்சி தலைவர் ஜானகிக்கு மாணவி தனு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ரீடு தொண்டு நிறுவன கூடுதல் இயக்குனர் மகேஸ்வரன் உடனிருந்தார்.

Tags : Satti ,
× RELATED சத்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ...