×

கோவில்பட்டியில் பாஜ புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

கோவில்பட்டி, ஜூன் 9: தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கோவில்பட்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட துணை தலைவர் பாலமுருகேசன் வரவேற்றார்.     மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, ரெங்கராஜ், தூத்துக்குடி பார்லிமென்ட் பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாநில பொதுச் செயலாளர்கள் வேல்ராஜா, சரவண கிருஷ்ணன், கிஷோர் குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் அம்மன் மாரிமுத்து, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் விஜயகுமார், விவசாய பிரிவு தலைவர் மருதையா, மாவட்ட செயலாளர் முத்துமாரி, மாரியப்பன், அமுதா கணேசன், ஆதிராஜ், தெற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி, வடக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, நகர தலைவர் சீனிவாசன், மகளிர் அணி மாவட்ட தலைவர் கலையரசி, தொழிநுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் போத்திராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ஜீவா கண்ணன், ஓபிசி அணி மாவட்ட தலைவர் வெங்கடேசன், ராணுவப் பிரிவு தலைவர் நடராஜ பெருமாள், கே.கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Bajaj ,Kovilpatti ,
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி