×

ஷிபா மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்

நெல்லை, ஜூன் 9: நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனையில் நிறுவனர் தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம் நாளை (10ம் தேதி) காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் மக்களுக்கு, உலகின் முன்னணி மருத்துவ நிபுணர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்று பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். மேலும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள எக்கோ, ஈசிஜி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, யுரிக் அமிலம், எலும்புத்தாது அடர்த்தி பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை ஆகியன முற்றிலும் இலவசமாக ெசய்யப்படும். பங்கேற்க விரும்புவோர் 9442139292 என்ற கைபேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு ஷிபா மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Shiba Hospital ,
× RELATED நோயாளிகள், சுகாதார ஊழியர்கள் உட்பட...