×

போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி

நாமக்கல், ஜூன் 9: ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்க, பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதற்கான கடிதத்தை, கலெக்டரிடம் அமைச்சர் மற்றும் எம்பி., வழங்கினர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்கு கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3,500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். போதமலை, கீழுர் ஊராட்சிக்கு வடுகம் முதல் மேலூர் வரை மற்றும் புதுப்பட்டி முதல் கெடமலை வரை, வனப்பகுதி வழியாக புதிய சாலை அமைக்க பல்லாண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கீழ் செயல்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், போதமலையில் உள்ள கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு, 34 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதன்படி, போதமலை கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு, வடுகத்திலிருந்து 23.65 கி.மீ. நீளத்திற்கும், ஆர்.புதுப்பட்டியிலிருந்து கெடமலைக்கு 11.37 கி.மீ. தொலைவிற்கும் சாலை அமைக்க, உச்சநீதிமன்றத்தின் பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி ஆணையின் உண்மை நகலை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கை சந்தித்து வழங்கினர். அப்போது எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Green tribunal ,Bodhamalai ,
× RELATED ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142...