நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 1,066 கனஅடி

கிருஷ்ணகிரி, ஜூன் 9: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி மற்றும் கேஆர்பி அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 640கன அடியாக இருந்த நிலையில், நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 640 கனஅடி தண்ணீர், அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 815 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1066 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 940 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50.60 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்பும் பட்சத்தில் ஆடிப்பட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: