×

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

திருவாரூர், ஜூன் 9: தனித்துறை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்றும் 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவிகித அகவிலைப்படியை சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போன்று 31 சதவீதமாக நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் புதிய 4ஜி விற்பனை நிலையம் மற்றும் 4ஜி சிம் கார்டு வழங்கிட வேண்டும், தரமற்ற பொருட்கள் தொடர்பாக பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்வதையும், பொருட்கள் இருப்பு தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதையும் கைவிட வேண்டும், மாத இறுதியில் ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு செய்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக ஆர்டிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குணசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹரிஹரன் மற்றும் பொறுப்பாளர்கள் நெடுஞ்செழியன், குமார், சாகுல்அமீது, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு