×

மத்திய மண்டல ஐஜி தகவல் இணையவழி குற்றங்கள் தடுக்க குழு நியமனம்

இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள 13,879 கிராமங்களில் கிராம காவல் இணைய வழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் உருவாக்கப்பட்டு 7,328 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக அவை செயல்பட்டு வருகின்றன. மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடமும் இணைய வழி குற்றங்கள் குறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் 193 கல்லூரிகளிலும் 623 பள்ளிகளிலும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

297 குழந்தை திருமணம் தடுப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வீடு வீடாக சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பத்தி அவசர தொடர்பு எண்கள் 1098, 191 மற்றும் சட்ட பாதுகாப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மத்திய மண்டலத்திற்குட்பட்ட 13,879 கிராமங்களில் 11,72,687 குடும்பங்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக சந்தித்தும், இதுவரை 25,300 இடங்களில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு உள்ளது. 297 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. அத்துடன் 160 போக்சோ குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : Central Zone IG ,Committee to Prevent Cyber Crimes ,
× RELATED திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு...