இட்லி கடைக்காரர் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி புரந்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு முகாம், கடன் வழங்கும் மேளா

பெரம்பலூர், ஜூன் 9: புரந்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் கடன் மேளா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகள் புதிய உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட விவசாய பெருமக்களுக்கு உறுப்பினர் கல்வித்திட்டத்தின் கீழ் புரந்தான் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நெல் பயிரிடப்பட்ட 2 ஏக்கர் பரப்பளவு உள்ள வயலில் நானோ யூரியா பயன்பாடு குறித்து நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இம்முகாமில் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப்பதிவாளர் அரியலூர், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் கள அலுவலர் மற்றும் அச்சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சங்கப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: