×

புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

கரூர், ஜூன் 9: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதிரை வண்ணார் இன மக்களை பொருளாதார, சமூக, கல்வி நிலைகளில் மிகவும் அடித்தளத்தில் வாழ்ந்து வருவதால் தமிழக அரசு புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த மக்களை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 18 வயது நிறைவடைந்த, ஆனால் 60 வயது நிறைவடையாமல் உள்ள நபர்கள் புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராகலாம்.

இந்த வாரியத்தில் உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகையை ஈடுசெய்தல் மற்றும் முதியோர் ஒய்வூதியம் (மாதந்தோறும்) வழங்கப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பங்களை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Welfare Board ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...