நெல்லை தாலுகா ஜமாபந்தியில் 7 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை

நெல்லை, ஜூன் 8: நெல்லை தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில்  பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் விஷ்ணு, 7 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் நடந்து வருகிறது. நெல்லை தாலுகாவிற்கான வருவாய் தீர்வாயத்தில் மதவக்குறிச்சி குறுவட்டத்திற்கு உட்பட்ட, வேளார்குளம், வெட்டுவான்குளம் ஆகிய பகுதி மற்றும் நாரணம்மாள் புரம் பகுதி-1, நாரணம்மாள்புரம் பகுதி-2, அனந்தகிருஷ்ணாபுரம், தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளம், அபிசேகப்பட்டி, ராமையன்பட்டி, ராஜவல்லிபுரம், பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம்  பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.  இதையொட்டி நடந்த ஜமாபந்தியில் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்  கீழ் 7 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இதில் நில அளவை உதவி இயக்குநர் வாசுதேவன், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) வெங்கடாசலம், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: