கலைஞர் பிறந்த நாளில் பொது மருத்துவ முகாம்

பரமக்குடி, ஜூன் 8: கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஏற்பாட்டில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் எலும்பு முறிவு மற்றும் இதய நோய் மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. முகாமை எம்எல்ஏ முருகேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, போகலூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூமிநாதன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர் கனிமொழி துரைமுருகன் வரவேற்றார்.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரபா, ராதா, கவிதா துர்கா,மாரியம்மாள், தனம் பொட்டிதட்டி ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். துரைமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: