மதுரை விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

மதுரை, ஜூன் 8: மதுரைக்கு நேற்று இரவு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6.45 மணிக்கு விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வருக்கு, விமானநிலையத்தின் வெளியே தொண்டர்கள் திரண்டு வந்து மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 இதில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, பி.மூர்த்தி, மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்முத்துராமலிங்கம், கோ.தளபதி எம்.எல்.ஏ, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், எம்எல்ஏக்கள் தமிழரசி ரவிக்குமார், புதூர் பூமிநாதன், வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் காலோன், ஏடிஜிபி தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்பி சிவப்பிரசாத், முன்னாள் மேயர் குழந்தைவேலு, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்று, கலைஞர் நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேலூர் அருகே, தும்பைப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு தங்கினார்.

Related Stories: