முத்துப்பேட்டை அருகே 110 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் வாலிபர் கைது

முத்துப்பேட்டை, ஜூன் 8: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் வடக்கு பகுதியில் புதுவை மாநில கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் ராஜசேகர்(39) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்த போது சிக்கினார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 110 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: