×

11ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் டெமு ரயில் ரத்து

டெமு ரயில் காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை வரை தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பராமரிப்பு காரணத்திற்காக ஞாயிற்றுக்கிழமை ரயில் கிடையாது. இந்நிலையில் வரும் 11ம் தேதி முதல் சனிக்கிழமையும் டெமு ரயில் கிடையாது. கேட் கீப்பர்கள் ஞாயிற்றுக்கிழமை விரைவு ரயிலுக்கு பணி செய்வதால் அவர்களுக்கு சனிக்கிழமை வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதனால் வரும் 11ம் தேதி சனிக்கிழமை முதல் தற்காலிகமாக சனிக்கிழமைகளிலும் டெமு ரயில் இயக்கப்படாது. இனிமேல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வாரத்தில் 5 நாட்கள் காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை வரை டெமு ரயில் இயக்கப்படும்.

Tags : Demu ,
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...