கந்தர்வகோட்டை பகுதிகளில் இரவு நேர மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

கந்தர்வகோட்டை, ஜூன் 8: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், மழையின்றி வறண்ட நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் பரிதவித்த நிலையில் கடந்த இரு தினங்களாக நள்ளிரவு நேரங்களில் இடியுடன் கனமழை பெய்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் வறண்டு காணப்பட்ட வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நீர் ஆழ்துளை கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயத்திற்கு இந்த மழை பயன்படுவதாகும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தொடர் மழை தொடர்ந்து பெய்தால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து தண்ணீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர், இதனால் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். தற்சமயம் பெய்த மழை நடவுக்கு சற்று ஏற்றது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories: