×

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த எடை குறைவான செயற்கை கோள் திருச்சி, கரூர், அரியலூர் ஜி.ஹெச்சில் சித்த மருத்துவ பிரிவில் வேலை நேரம் மாற்றம்

திருச்சி, ஜூன் 8: திருச்சி, கரூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவில் வேலை நேரத்தை அரசு மாற்றியுள்ளது. திருச்சி, கரூர், அரியலூர் தலைமை சித்த மருத்துவமனைகளில் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அரசு வேலை நேரத்தை மாற்றியுள்ளது. இந்த அனைத்து மருத்துவமனைகளிலும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும். திருச்சி தலைமை சித்த மருத்துவமனையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 10 மணி வரை இலவச யோகா கற்றுத்தரப்படுகிறது. செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சி திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டங்களான திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி மற்றும் இயற்கை யோகா மருத்துவ பிரிவுகளில் இந்த நாளில், நேரத்தில் உடலில் ஏற்படும் நோய்களை பற்றி விளக்கிக்கூறி அதற்குரிய மருத்துவ முறைகளையும் மருத்துவர்கள் எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குழந்தையின்மை மற்றும் கருப்பைபை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை, பிரசவம் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தைபேறு உண்டாக சிறப்பு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது. புதன்கிழமை எலும்பு, மூட்டுகள் சம்மந்தமாக நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வியாழக்கிழமை நரம்பு மற்றும் மூளை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெள்ளிகிழமை குழந்தையின்மை சார்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து நோய்களுக்கும் இலவச வர்ம சிகிச்சை மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy ,Karur ,Ariyalur ,
× RELATED நடிகை மஞ்சுவாரியர் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!