உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நெல்லை போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் வாடிக்கையாளர்களுக்கு இலவச மரக்கன்று

நெல்லை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நெல்லை டவுன் போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன. எனவே, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை டவுன் போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாடிக்கையளர்கள் அனைவருக்கும் போத்தீஸ் ஸ்வர்ண மகால் சார்பில்  பொதுமேலாளர் காந்திமதிநாதன், துணை மேலாளர் நயினார் ஆகியோர் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினர்.

Related Stories: