பாளை அண்ணா ஸ்டேடியத்தில் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம்

நெல்லை: பாளை அண்ணா ஸ்டேடியத்தில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. நெல்லையில் ஹாக்கி விசார்டு சார்பில் கடந்த 16ம் தேதி துவங்கிய கோடை கால பயிற்சி முகாம் நேற்று (6ம் தேதி) நிறைவடைந்தது. இம்முகாமில் பல்வேறு வயது பிரிவினரைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் என 90 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு பயிற்சியாளர்கள் அமர்நாத், டோம்னிக் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவு நாளில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், விடுதி மேலாளர் கிருஷ்ணசக்கரவர்த்தி ஆகியோர் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கினர். விழாவில் நம்பிகணேஷ், அர்ஜூன், செந்தில் கிருஷ்ணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பொன்சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: