விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் குடவாசல் தாலுகா நெடுஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் கிராமமக்கள் கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன்7: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா நெடுஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நெடுஞ்சேரி கிராமத்தில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு மேலாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாகவும் அங்குள்ள தொடக்கப்பள்ளி அருகே இந்த சாராய விற்பனை நடைபெற்று வருவதால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதுடன் அந்த வழியாக செல்லும் பெண்களும் கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் இது தொடர்பாக குடவாசல் போலீசார் மற்றும் நன்னிலம் மதுவிலக்கு போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் தகவல் தெரிவிக்கும் நபர் குறித்து கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் போலீசார் தகவல் தெரிவிக்கவே அவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மேற்படி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Related Stories: