×

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை

புதுக்கோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டைக்கு நாளை (8ம் தேதி) தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டமே விழாகோலம் பூண்டுள்ளது. மேலும் முதல்வர் வருகையையொட்டி திமுகவினர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை (8-ம் தேதி) நடைபெற உள்ள அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதை முன்னிட்டு மைதானத்தில் தற்காலிக பந்தல், அரங்குகள் அமைப்பு, மின்விளக்குகள் பொருத்துதல், நிகழ்ச்சி நடைபெறும் இடம் வழியாக அரசு மகளிர் கல்லூரியில் இருந்து மாலையீடு வரையில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தவிர, அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரையில் சாலையின் மையத்தில் அழகு செடி நடும் பணி நடைபெற்று வருகிறது. நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகளை எப்பாடி பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் உள்ளிட்ட அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள திமுகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சிறப்பாக வரவேற்க ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக புதுக்கோட்டை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Stalin ,Pudukottai ,
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...