ஆண்டிமடம், தா.பழூரில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி துவக்கம்

ஆண்டிமடம், ஜூன் 7: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் எனும் தலைப்பின் கீழ் ஆண்டிமடம் வட்டார வள மையத்திற்குட்பட்ட ஆண்டிமடம்-விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 5 நாள் பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது. ஆண்டிமடத்தில் நடைபெற்ற பயிற்சியினை அரியலூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு ஒன்று முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் துணை கருவிகளுடன் வகுப்பறை நிகழ்வை அமைத்தல், பாடங்களுக்கு உரிய கற்றல் வினைவுகள் மாணவர்கள் அறிய செய்தல், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்தல் போன்ற கருத்துக்களை பயிற்றுநர்கள் சத்தியபாமா, அகிலா, ஆசைத்தம்பி, ரமேஷ், கார்த்திகேயன், உத்திராபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் விளக்கி கூறினர்.

இப்பயிற்சியில் ஆண்டிமடம்-விளந்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பரிமளம், மேற்பார்வையாளர் அருள்ராஜ் விரிவுரையாளர் மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 40 ஆசிரியர்கள் வீதம் 120 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் தினமும் கலந்து கொள்கின்றனர். தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழக முதல்வர் 2025ம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண் அறிவு எழுத்தறிவு முழுமையாக அடைய வேண்டும். இந்த இலக்கை அடைய எண்ணும் எழுத்தும் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் தா.பழூர் வட்டாரத்தில் 45 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் தொட ங்கி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி முன்னிலையிலும், மேற்பார்வையாளர் சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஆசிரியர் பயிற்றுநர் சிவா மற்றும் ஆசிரிய கருத்தாளர்கள் என 45க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு பாடலை கூறும் விதமாக கைகளை அசைத்து நடனமாடி பாடல்களை பாடி, விலங்குகள் மற்றும் பறவைகள் உருவ அட்டைகளை தலையில் அணிந்து பயிற்சி பெற்றனர்.

Related Stories: