சிஇஓ பங்கேற்பு ரங்கம் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

ரங்கம், ஜூன் 8: பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த வசந்த உற்சவ திருவிழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டளுகிறார், 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: