×

காரைக்காலில் கோடை விடுமுறையால் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காரைக்கால்,ஜூன் 7: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் காரைக்கால் பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் தமிழக பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் உள்ளூர்வாசிகள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காரைக்கால் கடற்கரையில் குவிந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடலில் குளிக்க வேண்டாம் என்றும் ஆழ பகுதிக்கு செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இதன் குறித்து தெரியவில்லை. மக்கள் கூட்டம் இருந்த நிலையிலும் கடலோர போலீசார் மற்றும் ரோந்து போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இல்லாததால் வெளியூர் சுற்றுலா வாசிகள் அச்சத்தின் உணராமல் கடலில் குளித்து மிகவும் ஆழமான பகுதிகளுக்கு சென்று அதுவும் குழந்தைகள் பெண்கள் என ஏராளமானோர் குளித்தனர். மேலும் இளைஞர்கள் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று கடலில் குளித்து சாகசத்தை காட்டினர். பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...