நாகை கலெக்டர் அறிவுறுத்தல் பெண்களுக்கு எதிரான புகார்களை அலட்சியப்படுத்திய போலீசாரை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல்

நாகை,ஜூன்7: நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே போலீசாரை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சாலை மறியலில் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபாதேவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லலிதா முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மாலா, தமிழ்ச்செல்வி, குணவதி, வளர்மதி, அகிலா, சுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற புகார்களை அலட்சியப்படுத்த கூடாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். தொடர்ந்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 50 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories: