கரூரில் எஸ்விஎஸ் எஸ்விஎஸ்  விநாயகாs டயக்னோஸ்டிக் லேப் திறப்பு விழா

கரூர், ஜூன்7: கரூர் மேற்கு காமராஜபுரம் பகுதியில் எஸ்விஎஸ்  விநாயகா டயக்னோஸ்டிக், லேப் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில், மதுரை கேஜிஎஸ் ஸ்கேன்ஸ் மருத்துவர் கேஜி சீனிவாசன், மதுரை ஏஆர் கிளினிக் மருத்துவர் பார்த்தீபன், கரூர் அமராவதி மருத்துவமனை மருத்துவர் வேலுசாமி, நிர்மலா நர்சிங் ஹோம் மருத்துவர் ஜெயபாலன், தீபா கண்ணன் மருத்துவமனை மருத்துவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு, இந்த மையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் அனைத்து மருத்துவர்களும், எஸ்விஎஸ்  விநாயகா டயக்னோஸ்டிக், லேப் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில் திறப்பு விழா காணப்பட்டுள்ள இந்த மையத்தில் மேம்படுத்தப்பட்ட எம்ஆர்ஐ (1.5 டெஸ்லா), சிடி ஸ்கேன் (80சிலிகா), இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மேமோகிராபி, எக்கோ கார்டியாகிராம், தானியங்கி லேப், முழு உடல் பரிசோதனை, கார்ப்பரேட் ஹெல்த் செக்அப் போன்ற அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. மேலும், தோல் நோய், முடி உதிர்தல், மரு எடுத்தல், கீலாய்டு சிகிச்சை, கெமிக்கல் பீல்ஸ், தோல் உராய்தல், வெண்படை, முகப்பரு சிகிச்சை, படர்தாமரை போன்ற நோய்களுக்கான சிகிச்சை வசதியும் இங்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: