×

ருணாநிதி பிறந்த நாள் விழா இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்துக்கோட்டை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99.வது பிறந்த நாளையொட்டி  ஊத்துக்கோட்டை அடுத்த தச்சூர் கிராமத்தில் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்  தனியார் பள்ளியில் சென்னை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.பள்ளியின் துணை இயக்குனர் ராஜேஷ் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், சிவன்யா, யோவான், சித்ரா பாபு, வெஸ்லி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிபூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ கோவிந்தராஜன் பங்கேற்று முன்னதாக கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 பேர் கண் சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு  தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நோயாளிகளுக்கு மாத்திரை மருந்துகளை வழங்கப்பட்டது. இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், கோல்ட் மணி, இளைஞரணி அமைப்பாளர் ராமாராவ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Runanidhi ,Birthday ,Free Eye Examination Camp ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி